/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம்
/
நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம்
ADDED : ஆக 07, 2025 11:29 PM

விக்கிரவாண்டி: நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விக்கிரவாண்டி வட்டம், கல்யாணம் பூண்டியில், 11வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, ரூ.63 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய் பரிசோதனை, தோல், பல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள், 150 நெசவாளர்களுக்கு அளிக்கப்பட்டன.
கடலுார் சரக உதவி இயக்குனர் இளங்கோவன், தாசில்தார் செல்வமூர்த்தி, கைத்தறி துறை அலுவலர் மோகன்தாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் நெசவாளர்கள் முகாமில் பங்கேற்றனர்.