/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்டாச்சிபுரத்தில் ஆடிப்பூர விழா
/
கண்டாச்சிபுரத்தில் ஆடிப்பூர விழா
ADDED : ஜூலை 29, 2025 10:39 PM

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் ராமநாதீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக பெண்கள் பங்குபெற்ற 108 பால்குட ஊர்வலம் நடந்தது. மாலை ஞானாம்பிகை அம்மன் சன்னதியில் சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு ஞானாம்பிகை அம்மன் சமேத சந்திரசேகரசுவாமிகள் வீதியுலா நடந்தது.
விழுப்புரம்: விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. விழுப்புரம் தெற்கு ரயில்வே காலனியில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவிலில் 29ம் ஆண்டு ஆடிமாத உற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றி காப்பு கட்டுதலோடு துவங்கியது. நேற்று முன்தினம் ஆடிப்பூரத்தையொட்டி, அம்மனுக்கு 1 லட்சத்து 8 வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் ஆரிய வைசிய சமூகத்தினர் சார்பில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை மூலவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு உற்சவர் அம்மனுக்கு வளையல்கள் அலங்காரம் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.