/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.4.76 லட்சம் 'அபேஸ்'
/
ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.4.76 லட்சம் 'அபேஸ்'
ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.4.76 லட்சம் 'அபேஸ்'
ஆன்லைனில் வேலை தருவதாக கூறி ரூ.4.76 லட்சம் 'அபேஸ்'
ADDED : டிச 19, 2024 01:00 AM
விழுப்புரம்: ஆன்லைனில் பகுதிநேர வேலை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.4.76 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த எறையூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா, 27; இவர், கடந்த 12ம் தேதி தனது மொபைல் போனில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பகுதிநேர வேலை என்ற லிங்க்கை அணுகினார்.
அதில் பேசிய மர்ம நபர், ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி, முதலில் ரூ.4,800 பெற்றுள்ளார். அதன் பிறகு, 10 தவணைகளில் ரூ.4.76 லட்சம் தொகையை அனுப்பி, டாஸ்க்கை நிறைவேற்றியுள்ளார். ஆனால், அதற்குரிய தொகை வந்து சேராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவிதா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.