/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஏ.டி.எம்., கார்டை மாற்றி தொழிலாளியிடம் 'அபேஸ்'
/
ஏ.டி.எம்., கார்டை மாற்றி தொழிலாளியிடம் 'அபேஸ்'
ADDED : செப் 25, 2025 12:42 AM
முண்டியம்பாக்கம்:விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் சுதாகர், 46, கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு, விழுப்புரம் பிள்ளையார்கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றார்.
அங்கு வந்த நபர் ஒருவர், தான் பணம் எடுத்து தருவதாக கூறி, ஏ.டி.எம்., கார்டை வாங்கினார். பின், பணம் வரவில்லை என கூறி சுதாகரின் ஏ.டி.எம்., கார்டுக்கு பதிலாக, வேறொரு கார்டை மாற்றி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
வீட்டுக்கு திரும்பிய சுதாகரின் மொபைல் போனுக்கு, சிறிது நேரத்தில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக தகவல் வந்தது.
அப்போது தான் அவருக்கு தன்னிடம் உள்ளது போலியான ஏ.டி.எம்., கார்டு என்பது தெரிய வந்தது. இதுகுறித்து சுதாகர் அளித்த புகாரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.