/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் அமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
/
விழுப்புரத்தில் அமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
விழுப்புரத்தில் அமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
விழுப்புரத்தில் அமைச்சர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜன 31, 2024 05:19 AM

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தியாகிகள் தினத்தையொட்டி அமைச்சர் மஸ்தான் தலைமையில் அரசு ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.-
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தியாகிகள் தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் மஸ்தான் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நாட்டின் சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜன.30ம் தேதி தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்கப்படுகிறது. அதனடிப்படையில் இன்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்படி, அமைச்சர் மஸ்தான் தலைமையில், அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில், காந்தியடிகளின் 77-வது நினைவு தினத்தினை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், டி.ஆர்.ஓ.,க்கள் பரமேஸ்வரி, (நில எடுப்பு) சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரிதாஸ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.