/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம்
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : அக் 30, 2024 04:22 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காமராஜர் சிலை அருகிலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை சங்கத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
திண்டிவனம் தீயணைப்புத்துறை அலுவலர் பாஸ்கரன், சிறப்பு நிலை அலுவலர் முருகையன் முன்னிலை வகித்தனர்.
லயன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் பிரசார ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில், நண்பர்கள் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பால்பாண்டியன் ரமேஷ், காமராஜ், ஏகாம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். ஊர்வலம் காந்தி சிலை அருகே முடிந்தது.