UPDATED : நவ 05, 2026 11:51 PM
ADDED : நவ 04, 2026 06:17 PM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லாத தீபாவளி , போதை பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் விஜய பிரபா, முரளி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மேனகா வரவேற்றார்.
விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் பங்கேற்று பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் ஒழிப்பு மற்றும் விபத்தில்லாத தீபாவளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.பள்ளி ஆசிரியர் பழனிவேலு, ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
