UPDATED : நவ 05, 2026 11:51 PM
ADDED : நவ 04, 2026 06:17 PM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் துாய்மை பணியாளருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
பேரூராட்சி வளாகத்தில் நடந்த முகாமிற்கு செயல் அலுவலர் ஷேக் லத்திப் தலைமை தாங்கி மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.
விக்கிரவாண்டி வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் டாக்டர் சரஸ்வதி மற்றும் மருத்துவ குழுவினர் துாய்மை பணியாளர்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை குறித்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
சுகாதார ஆய்வாளர் கவி வளவன், இளநிலை உதவியாளர் காமராஜ், துப்புரவு மேற்பாரையாளர் ராமலிங்கம், பதிவறை எழுத்தர்கள் துரை, சேகர், கணினி ஆபரேட்டர் கீதா, உதவியாளர்கள் பிரபா, தீனா உட்பட அரசு ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
