/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய புறவழிச்சாலையில் விபத்துகள் வேகத்தடை அமைக்கக்கோரி மறியல்
/
புதிய புறவழிச்சாலையில் விபத்துகள் வேகத்தடை அமைக்கக்கோரி மறியல்
புதிய புறவழிச்சாலையில் விபத்துகள் வேகத்தடை அமைக்கக்கோரி மறியல்
புதிய புறவழிச்சாலையில் விபத்துகள் வேகத்தடை அமைக்கக்கோரி மறியல்
ADDED : மார் 18, 2024 03:48 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே சாலை கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
திண்டிவனம் - செஞ்சி சாலையில் சாலை கிராமத்தில் சமீபத்தில் நகாய் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய புறவழிச்சாலை வழியாக அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன.
நேற்று காலை 8:00 மணியளவில், சாலை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி சாரதா, 55; என்பவர் புறவழிச்சாலையைக் கடந்தார்.
அப்போது, திண்டிவனத்திருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்தார். ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் புறவழிச்சாலை பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க அந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என சாலை கிராம மக்கள் 50க்கு மேற்பட்டோர் காலை 9:30 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டிவனம் - செஞ்சி சாலையில் போக்குவரத்து பாதித்தது.
ரோஷணை இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், நடவடிக்கை எடுப்பதாக கூறிய போலீசார், விபத்து நடக்கும் இடத்தில் பேரி கார்டு வைத்தனர். அதனைத் தொடர்ந்து, 10:00 மணியளவில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.

