/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரி இடம் குறித்து அவதுாறு பரப்பியவர் மீது நடவடிக்கை: கலெக்டர்
/
அரசு கல்லுாரி இடம் குறித்து அவதுாறு பரப்பியவர் மீது நடவடிக்கை: கலெக்டர்
அரசு கல்லுாரி இடம் குறித்து அவதுாறு பரப்பியவர் மீது நடவடிக்கை: கலெக்டர்
அரசு கல்லுாரி இடம் குறித்து அவதுாறு பரப்பியவர் மீது நடவடிக்கை: கலெக்டர்
ADDED : மார் 08, 2024 12:07 PM
செஞ்சி: 'செஞ்சி அரசு கலைக் கல்லுாரிக்கான இடம் குறித்து அவதுாறு பரப்பி வருபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டியில் அரசு கலை கல்லுாரி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் பழனி, நிருபர்களிடம் கூறியதாவது:
செஞ்சியில் கடந்த 2022ம் ஆண்டு கல்லுாரி துவங்கி அரசு பள்ளியில் இயங்கி வருகிறது. இதற்காக இடம் தேர்வு செய்து கட்டடம் கட்ட கோர்ட் நடவடிக்கையால் தாமதம் ஆனது.
இந்த இடம் தேர்வு செய்து கல்லுாரி கட்டி வருவது குறித்து சோஷியல் மீடியாக்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வக்பு இடம் என்று சொல்லி வந்தார். இந்த இடம் அரசு நிலம் என்பதை அவருக்கு தெரிவித்தோம். அவர் வக்போர்டில் மேல் முறையீடு செய்தார்.
வக்போர்டும் ஆவணங்களை சரி பார்த்து அரசு இடம் என்பதை உறுதி செய்தது. ஆனாலும் அந்த நபர் சுப்ரீம் கோர்ட் வரை வழக்கை கொண்டு சென்றார். நீதிமன்றத்திலும் அரசு நிலம் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
கல்லுாரி கட்ட உள்ள இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது.
இதில் ஒரே நபர் மட்டும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். தேவையென்றால் அவர் டிரிப்யூனலில் முறையிட்டிருக்கலாம். அவர் மீது அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு கலெக்டர் பழனி கூறினார்.

