/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துணை சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை தேவை
/
துணை சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 21, 2025 12:24 AM
கண்டாச்சிபுரம், : முகையூர் ஒன்றியத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்டாச்சிபுரம் தாலுகாவிற்குட்பட்ட முகையூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒதியத்துார், மேல்வாலை, வீரங்கிபுரம், சித்தாத்துார் ஆகிய ஊராட்சிகளில் உள்ள மக்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டால், கண்டாச்சிபுரம் அரசு மருத்துவமனையை மட்டும் நம்பியுள்ளனர்.
தரம் உயர்த்தப்படாத இந்த மருத்துவமனையில் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஒதியத்துார் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைத்தால் ஒதியத்துார், கீழ்வாலை, ஆர்.சி., திருமல்ராயபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடைவர்.
மேல்வாலை ஊராட்சியில் அமைத்தால் பீமாபுரம், ஒடுவன்குப்பம், கீழ்வாலை, சித்தாத்துார், புதுார் பகுதி மக்கள் பயனடைவர். எனவே இப்பகுதியில் துணை சுகாதார நிலையங்கள் அமைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.