/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிடங்கல் ஏரியில் வெங்காயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை
/
கிடங்கல் ஏரியில் வெங்காயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை
கிடங்கல் ஏரியில் வெங்காயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை
கிடங்கல் ஏரியில் வெங்காயத்தாமரை அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : நவ 10, 2025 04:06 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் கிடங்கல் ஏரியை வெங்காயத்தாமரை முழுவதும் ஆக்கிரமித்துள்ளதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் நகராட்சி இந்திராகாந்தி பஸ் நிலையம் பின்புறம் உள்ள கிடங்கல் ஏரி 975 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து மூலம், ஜக்காம்பேட்டை, கருணாவூர், ஓமந்துார் கொந்தமூர், கிளியனுார் எடச்சேரி, கொஞ்சுமங்கலம், புதுகுப்பம், உப்புவேலுார், காரட்டை, அறுவடை போன்ற கிராமங்களிலுள்ள 500 ஏக்கருக்கம் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயனடைந்தன.
இந்த அளவிற்கு விவசாயத்திற்கு பயன்பெற்று வந்த கிடங்கல், ஏரி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களால் சூழப்பட்டும், போதுமான பராமரிப்பின்றி, கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி விட்டது. ஏரியின் நீர்வரத்து வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டதால், மழைக் காலங்களில் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்து போனது.
நீர்வரத்து குறைந்ததால், ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலர் நுாற்றுக்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகளை கட்டி நிரந்தரமாக ஆக்கிரமித்துவிட்டனர்.
இதற்கிடையில் மழைக்காலம், வடகிழக்கு பருவ மழை துவங்கிவிட்ட நிலையில், கிடங்கல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. ஆனால் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஏரியின் பெரும் பகுதியை வெங்காயத்தாமரை புதர்போல் வளர்ந்து, ஆக்கிரமித்துள்ளது.
இதனால் ஏரியில் தேங்கியுள்ள 40 சதவீதத்திற்கு மேலான நீரை உறிஞ்சி வருவதுடன், நிலத்தடி நீர் பாதிப்பட் டுள்ளது. பாசன விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நீர்வளத்துறை அதிகாரிகள், கிடங்கல் ஏரி முழுதும் ஆக்கிரமித்துள்ள வெங்காயத்தாமரைச் செடிகளை அகற்றிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

