/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீயணைப்பு அலுவலக சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை
/
தீயணைப்பு அலுவலக சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை
ADDED : செப் 09, 2025 03:43 AM

விழுப்புரம் : பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை அலுவலக சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து தலைமை அதிகாரிகளின் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலகம் மற்றும் வனத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகங்களுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதையடுத்து, சிமெண்ட் சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. இதை தொடர்ந்து, சீரமைப்பு மேற்கொள்ளாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், ஜல்லி கற்கள் சிதறி கிடப்பதால் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் பொதுமக்கள், அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.