/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் சீரமைக்க நடவடிக்கை தேவை
/
வி.ஏ.ஓ., அலுவலக கட்டடம் சீரமைக்க நடவடிக்கை தேவை
ADDED : நவ 11, 2024 05:48 AM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் அடுத்த தென்பசார் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது.
இந்த கட்டடம் கடந்த 2004ம் ஆண்டு கட்டப்பட்டது. பராமரிப்பில்லாததால் கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன.
மழைக்காலத்தில் கட்டடத்தின் உள்பகுதி ஒழுகுவதால், உள்ளே ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை உள்ளது.
கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என தென்பசார் ஊராட்சி மற்றும் பொது மக்கள் சார்பில் மரக்காணம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. விரைந்து கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.