/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
/
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : ஆக 15, 2025 11:16 PM
விழுப்புரம், ; சுதந்திர தின விழாவில் விதிமீறிய 65 நிறுவனங்கள் மீது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையிலான அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.விடுமுறை தினத்தில் பணியாளர்களுக்கு இரட்டிப்பு வழங்காமலும், மாற்று விடுமுறை அளிக்காமலும், அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக 134 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 20 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 40 ஓட்டல்கள், 5 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 65 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.