/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை! அரசின் சிறப்பு சேவைகள் துறை ஏற்பாடு
/
ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை! அரசின் சிறப்பு சேவைகள் துறை ஏற்பாடு
ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை! அரசின் சிறப்பு சேவைகள் துறை ஏற்பாடு
ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்புக்கு நடவடிக்கை! அரசின் சிறப்பு சேவைகள் துறை ஏற்பாடு
ADDED : அக் 03, 2025 02:16 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், குழந்தைகளை பாதுகாப்பதற்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் குழந்தைகளின் உரிமைகள், சட்டங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரச்னைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தைகள் சார்ந்த பிரச்னைகளைக் கண்டறிந்து, உடனடி நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. ஆதர வற்ற, பொருளாதார ரீதி யாக பின் தங்கிய குழந்தை களுக்கு நிதி ஆதரவு (உதவித் தொகை) வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், 18 வயதிற்குட்பட்ட ஆதரவற்ற மற்றும் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை சட்டரீதியாக தத்தெடுக்க மற்றும் தற்காலிக பராமரிப்பு அளித்திட ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களை பதிவு பெற்று தருவதுடன், கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சட்ட உதவி பெற வழிகாட்டுதல், குழந்தை தொழிலாளர்களை மீட்பதற்கான நடவடிக்கை.
கடத்தப்படும் மற்றும் காணாமல் போன குழந்தை களை கண்டறிவதற்கும், ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து மறுவாழ்வு அளிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குழந்தை நல குழுமம் மூலம் பாதுகாப்பு தேவைப் படும் குழந்தைகளுக்கும், அவசர உதவி அலகு மூலம் சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகளுக்கும், இளைஞர் நீதி குழுமத்தின் மூலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கும், தொட்டில் குழந்தை திட்டத்தின்படி, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை கண்டறிந்து குழந்தை நலக்குழுவில் ஒப்படைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், கலெக்டர் தலைமையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. குழந்தைகளை பாதுகாப்பதற்கான சார்பு துறைகளாக கல்வித்துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, இளைஞர் நீதிக் குழுமம், குழந்தை நலக்குழுமம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சைல்டு லைன், தன்னார்வ தொண்டு நிறுவனம், ரயில்வே போலீஸ், காவல்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்டவை செயல்படுகின்றன.
தமிழக அரசு சார்பில், கடந்த மாதம் 15ம் தேதி, 'அன்புக் கரங்கள்' என்கிற திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், இயலா நிலையில் உள்ள ஒற்றைப் பெற்றோர், தீராத நோய் பாதிக்கப்பட்ட ஒற்றை பெற்றோர், சிறைச்சாலையில் உள்ள ஒற்றைப் பெ ற்றோர் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்படி, மாவட்டத்தில் 207 குழந்தை களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு அவசர உதவி எண்.1098
ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாப்பதற்கான அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உதவி தேவைப்படுவோர், விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அலுவலகத்திற்கு (ெதாலைபேசி எண்: 04146 -290659, இ-மெயில் : dcpuvpm2@gmail.com ) தகவல் தெரிவிக்கலாம். பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான அவசர உதவி எண் 1098 என்கிற தொலைபேசி மூலம் அழைக்கலாம். பஸ் நிலையம், ரயில் நிலையம், கடைவீதிகளில் ஆதரவின்றி குழந்தைகள் பரிதவிப்பது குறித்து, உடனடியாக காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க முன் வர வேண்டும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி தெரிவித்துள்ளார்.