/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளம்பர செலவு வேட்பாளர் கணக்கில் சேர்ப்பு! மாவட்ட தேர்தல் அலுவலர் கிடுக்கிப்பிடி
/
விளம்பர செலவு வேட்பாளர் கணக்கில் சேர்ப்பு! மாவட்ட தேர்தல் அலுவலர் கிடுக்கிப்பிடி
விளம்பர செலவு வேட்பாளர் கணக்கில் சேர்ப்பு! மாவட்ட தேர்தல் அலுவலர் கிடுக்கிப்பிடி
விளம்பர செலவு வேட்பாளர் கணக்கில் சேர்ப்பு! மாவட்ட தேர்தல் அலுவலர் கிடுக்கிப்பிடி
UPDATED : மார் 22, 2024 12:04 PM
ADDED : மார் 22, 2024 12:04 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக மாவட்ட ஊடக சான்றளிப்பு குழு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் மற்றும் தேர்தல் நன்னடத்தை விதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், உள்ளூர் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில், வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வெளியிட, மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அனுமதி வழங்கிய பிறகே விளம்பரங்கள் வெளியிடப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சம்மந்தப்பட்ட நிறுவனங்கள், வேட்பாளரின் விளம்பரங்கள் வெளியிடும்போது, ஊடக சான்றளிப்பு குழுவின் அனுமதி பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும். வேட்பாளரின் அனுமதி பெறாமல் எந்தவொரு நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடக் கூடாது.
மேலும் வெளியிடும் விளம்பரங்களில் நிறுவனத்தின் விபரங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் தனி நபர்களின் ஒளிப்பதிவு விளம்பரங்கள், வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். எல்.இ.டி., திரைகள், எல்.இ.டி., வாகனங்கள் மூலம் விளம்பரங்களை ஊடக மையத்தின் ஒப்புதல் பெற்று ஒளிபரப்ப வேண்டும். வீடியோ ஒளிபரப்புக்கான செலவும் வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.
தேர்தல் தொடர்பாக, அச்சடிக்கும் துண்டுபிரசுரம், சுவரொட்டிகள் போன்றவற்றில் கட்டாயம் அச்சகத்தின் பெயர், முகவரி இடம்பெற வேண்டும். எனவே, தேர்தல் தொடர்பாக நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், உள்ளூர் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்கள் போன்றவற்றில், வேட்பாளர் வெளியிடும் விளம்பரங்கள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து, தேர்தல் அலுவலரிடம் ஒப்புதல் பெற்று, தேர்தல் செலவினப் பார்வையாளர் பார்வைக்கு வழங்கப்படும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி பேசினார்.
கூட்டத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்கள், மாவட்ட ஊடக சான்றளிப்புக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

