/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருச்சி - சென்னை சாலையில் கூடுதல் மேம்பாலம், சப்-வே பணிகள் தீவிரம்
/
திருச்சி - சென்னை சாலையில் கூடுதல் மேம்பாலம், சப்-வே பணிகள் தீவிரம்
திருச்சி - சென்னை சாலையில் கூடுதல் மேம்பாலம், சப்-வே பணிகள் தீவிரம்
திருச்சி - சென்னை சாலையில் கூடுதல் மேம்பாலம், சப்-வே பணிகள் தீவிரம்
ADDED : அக் 22, 2025 12:24 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டில் திருச்சி - சென்னை சாலையில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் மேம்பாலம் மற்றும் சப் வே பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் தஞ்சாவூர்- கும்பகோணம் நான்கு வழிச் சாலை பிரியும் இடத்தில் சென்னை - திருச்சி புறவழிச் சாலையில் மேம்பாலம் உள்ளது. பெருகிவரும் வாகன போக்குவரத்தை கருத்தில் கொண்டும், விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டும் கூடுதலாக திருச்சி - சென்னை சாலையில் மேம்பாலம் அமைக்க நகாய் திட்டமிட்டு 27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
மேம்பாலம் பணியை ஓராண்டுக்குள் முடிக்க நாமக்கல்லைச் சேர்ந்த 'மீனாள் அண்ட் கோ' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் மேம்பாலம் பணியை துவங்கி முதல் கட்டமாக பாப்பனப்பட்டு கிராம மக்கள், இலகு ரக வாகனங்கள் புறவழிச்சாலையை பாதுகாப்பாக கடக்கும் வகையில் சப் வே அமைக்கும் பணி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பணி முடிந்தவுடன் மேம்பால த்திற்கான பணிகளை துவக்க தேவையான தடுப்பு சுவர் மற்றும் பார் மண் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
சாலையின் மேற்கு புறத்தில் அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையில் ஆங்காங்கு ஜல்லிகள் பெயர்ந்து வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக போனது.
நகாய் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சர்வீஸ் சாலையை மறு சீரமைப்பு செய்து வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.