/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் - திண்டிவனம் சாலையை இணைத்து பை பாஸ் அமைக்கப்படுமா? செஞ்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்
/
விழுப்புரம் - திண்டிவனம் சாலையை இணைத்து பை பாஸ் அமைக்கப்படுமா? செஞ்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்
விழுப்புரம் - திண்டிவனம் சாலையை இணைத்து பை பாஸ் அமைக்கப்படுமா? செஞ்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்
விழுப்புரம் - திண்டிவனம் சாலையை இணைத்து பை பாஸ் அமைக்கப்படுமா? செஞ்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்
ADDED : அக் 22, 2025 12:26 AM

செஞ்சி: செஞ்சி நகரில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சமாளிக்க திண்டிவனம் மற்றும் சேத்துப்பட்டு சாலைகளை விழுப்புரம் சாலையுடன் இணைத்து பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக செஞ்சி உள்ளது. செஞ்சியை சுற்றி புதிதாக ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உருவாகியுள்ளன.
புதிதாக தொழில், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இதனால் செஞ்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது, விழுப்புரத்தில் இருந்து ஆற்காடு, ராணிப்பேட்டைக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை எண்: 4 செஞ்சி வழியாக செல்கிறது.
இந்த சாலை வழியாக திருச்சியில் உள்ள 'பெல்' நிறுவனத்தில் இருந்து தினமும் தொழில் நகரமான ராணிப்பேட்டைக்கு உபகரணங்களை ஏற்றி கொண்டு ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன.
இதில் மிக நீளமான கனரக வாகனங்கள் நான்கு முனை சாலையிலும், திண்டிவனம் - சேத்துப்பட்டு கூட்ரோட்டிலும் திரு ம்ப முடியாமல் ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.
செஞ்சி வழியாக விழுப்புரத்தில் இருந்து வேலுார், ஆற்காடு, ஆரணி மற்றும் திருப்பதிக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
ஏற்கனவே, சென்னையி ல் இருந்து திருவண்ணாமலைக்கும், புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலை, பெங்களூர், ஐதராபாத் செல்வதற்கும் செஞ்சி பிரதான வழியாக உள்ளது .
கர்நாடக மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்து சொல்லும் சுற்றுலா பயணிகள் செஞ்சி நகரின் வழியாக செல்கிறனர்.
அமாவாசை நாட்களின் போது கடலுார், விழுப்புரம், சிதம்பரம், நெய்வேலி, திட்டக்குடி, திருச்சி மார்க்கத்தில் இருந்து மேல்மலையனுார் வரும் ஆயிரக்கணக்கான கார், வேன் மற்றும் பஸ்கள், செஞ்சி நகரத்தின் வழியாக செல்லும் போது செஞ்சி நான்கு முனை கூட்ரோட்டில் நீண்ட நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து போகிறது.
பவுர்ணமி நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்களால் செஞ்சி நகரம் திக்கு முக்காடி போகிறது. ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் செஞ்சி நகர மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்
அதனால், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மாற்று ஏற்பாடாக திண்டிவனம், சேத்துப்பட்டு சாலைகளில் இருந்து விழுப்புரம் சாலையை இணைத்து பைபாஸ் சாலை அ மைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
இதன் மூலம் செஞ்சி நகருக்குள் வரும் 20 முதல் 30 சதவீதம் வாகனங்கள் பைபாஸ் வழியாக செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.