/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டை கரும்பில் கூடுதல் லாபம்; ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை
/
கட்டை கரும்பில் கூடுதல் லாபம்; ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை
கட்டை கரும்பில் கூடுதல் லாபம்; ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை
கட்டை கரும்பில் கூடுதல் லாபம்; ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் ஆலோசனை
ADDED : செப் 24, 2024 12:06 AM
செஞ்சி : கட்டை கரும்பு சாகுபடி மூலம் கூடுதல் லாபம் பெறலாம் என செம்மேடு ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் சார்பில் கரும்பு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு:
கட்டை கரும்பு வயல்களை முறையாக பராமரிப்பதன் மூலம் விவசாயிகள் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு கட்டை கரும்பு சாகுபடி மேற்கொள்ள முடியும். உர மேலாண்மை போன்ற உயர் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சர்க்கரை ஆலை மூலம் மானியமாக வழங்கப்படும் குருனை மருந்தினை கரும்பின் வேர் பகுதியில் இட்டு அதிக மகசூல் பெறலாம்.
கட்டை கரும்பு சாகுபடியில் உழவு விதை கரணை, நடவு போன்ற செலவுகள் அறவே இல்லை. இதன் மூலம் ஏக்கருக்கு 17 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகிறது.
கட்டை கரும்பு சாகுபடிக்கு அதிகபட்சமான 10 முதல் 14 முறை கட்டை விடலாம் தொடர்ச்சியாக கட்டை கரும்பு சாகுபடி மேற்கொள்ளும் போது கூடுதல் வருமானம் கிடைக்கிறது.
நடைபெற்று வரும் சிறப்பு பட்டத்தில் அறுவடை செய்யப்படும் அனைத்து வயல்களிலும் மறுதாம்பு கரும்பு சாகுபடி பணியை மேற்கொண்டு அதிகமாக மகசூல் பெற்று பலன் அடையலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.