/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த மாதம் வரை கரும்புத்தொகை பட்டுவாடா நிர்வாக அதிகாரி தகவல்
/
பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த மாதம் வரை கரும்புத்தொகை பட்டுவாடா நிர்வாக அதிகாரி தகவல்
பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த மாதம் வரை கரும்புத்தொகை பட்டுவாடா நிர்வாக அதிகாரி தகவல்
பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த மாதம் வரை கரும்புத்தொகை பட்டுவாடா நிர்வாக அதிகாரி தகவல்
ADDED : ஜன 12, 2025 10:18 PM
விழுப்புரம்; செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு அரவை, சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைநிர்வாக அதிகாரி முத்துமீனாட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024--25ம் ஆண்டின் கரும்பு அரவை, கடந்த மாதம் 25ம் தேதி துவங்கி, சிறப்பான முறையில் அரவை நடைபெற்று வருகிறது. இந்த ஆலையில் கடந்த மாதம் 31ம் தேதி வரை அரவை செய்த கரும்புக்கான கரும்பு கிரையம் டன் ஒன்றிற்கு ரூ.3 ஆயிரத்து 151 வீதம் கரும்பு சப்ளை செய்த அங்கத்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் வெட்டுக்கூலியும், வாகன வாடகையும் வழங்கப் பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையும், நடப்பு 2024--25ம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு கரும்பு சப்ளை செய்யும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
தற்போது, ஆலை அமைந்துள்ள பகுதியில் நெல்அறுவடை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், நெல் அறுவடைக்கு பின்பு கரும்பு நடவு செய்திடுமாறும், இதற்கு கோ 86032, கோ 11015, கோ 09356, கோ 18009, கோக 13339 ஆகிய ரக விதைக் கரும்பு நாற்றுகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றின் கீழ் பருசீவல் நாற்று, ஒரு பரு கரணை, திசு வளர்ப்பு நாற்று, வல்லுநர் விதை கரும்பு ஆகிய இனங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது. கரும்பு விவசாயிகள், இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
மேலும் ஆலைக்கு சப்ளை செய்திடும் கரும்பில் போத்து, கொழுந்தடை நீக்கி சுத்தமாக சப்ளை செய்து சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்திடவும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன்.
கரும்பு அறுவடையை எளிதாக்க கரும்பு வெட்டு இயந்திரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கரும்பு விவசாயிகள் இயந்திரம் மூலம் சிரமமின்றி அறுவடை செய்து பயன் பெறலாம். இவ்வாறு ஆலை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.