/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விழா
/
பொறியியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை விழா
ADDED : செப் 05, 2025 09:55 PM

திண்டிவனம்:
திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்திலுள்ள சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், பொறியியல் முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு ராமதாஸ் கல்வி அறக்கட்டளை சேர்மன் மணி தலைமை தாங்கி பேசினார். கல்லுாரியின் அறக்கட்டளை உறுப்பினர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார்.
ராமதாஸ் கல்வி அறக்கட்டளை முதன்மை நிர்வாக அலுவலர் சிவக்குமார், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் வரவேற்றனர்.
விழாவில், கிரியா டெக் சி.இ.ஓ., பாஸ்கரன் கேசவன், எல் அண்ட் டி, தென்மண்டல அதிகாரி ஏகாம்பரம் மோகன்ராஜ் ஆகியோர் பொறியியல் படிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினர்.
விழாவில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் பங்கேற்றனர்.