/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் அரசு கல்லுாரியில் முதுகலை படிப்புக்கு சேர்க்கை
/
விழுப்புரம் அரசு கல்லுாரியில் முதுகலை படிப்புக்கு சேர்க்கை
விழுப்புரம் அரசு கல்லுாரியில் முதுகலை படிப்புக்கு சேர்க்கை
விழுப்புரம் அரசு கல்லுாரியில் முதுகலை படிப்புக்கு சேர்க்கை
ADDED : ஆக 12, 2025 02:48 AM
விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் முதுகலை பாட பிரிவுக்கான பொது கலந்தாய்வு நாளை (13ம் தேதி) நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், 2025-26ம் ஆண்டிற்கான முதுகலை எம்.ஏ.,- எம்.எஸ்சி.,- எம்.காம்., பாட பிரிவுகளுக்குக்கான பொது கலந்தாய்வு நாளை 13ம் தேதி காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்பம், பத்தாவது, பிளஸ் 2, இளங்கலை பட்டப் படிப்பு மதிப்பெண் பட்டியல் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்று, விண்ணப்பதாரர் மற்றும் பெற்றோர் பாஸ்போர்ட் போட்டோ, வங்கி கணக்கு விபரம், ஆதார் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.