/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை
/
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் சேர்க்கை
ADDED : மே 29, 2025 12:06 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான சேர்க்கை நடப்பதாக கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்டம் மூலம் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் முழு வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,741 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டசத்தோடு கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவ கல்வி வழங்கப்படுகிறது.
குறிப்பாக 2 வயது முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவ கல்வி செய்கை பாடல், கதை, விளையாட்டு கல்வி உபகரணங்கள் மூலம் அளிக்கப்படுகிறது.
குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள் தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாமல் சேர்க்க வேண்டும். குழந்தைகள் மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டு வழங்கும் பணி நடப்பதால், இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.