/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
/
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ADDED : மே 06, 2025 05:15 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2025 - 26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் சேர கல்வி தகுதி 7 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. நாதசுவரம், தவில், தேவாரம் சேர எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதும். 12 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் சேரலாம்.
பயிற்சி காலம் 3 ஆண்டுகள் முடிந்தவுடன் அரசு தேர்வு நடத்தி, அரசு சான்றிதழ்கள் வழங்கப்படும். சுயவேலைவாய்ப்பு மற்றும் அரசு வேலைவாய்ப்பிற்கு வழிவகுக்கும் இந்த கல்வியில், ஆண், பெண் இருபாலரும் சேரலம். பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
அனைத்து மாணவர்களுக்கும், வாரந்தோறும் திங்கள் கிழமை கல்வி உதவிதொகையாக ரூ.400 வழங்கப்படுகிறது. இலவச பஸ் சலுகை, குறைந்த கட்டணத்தில் ரயில் பயண சலுகை, இலவச பாட புத்தகம், அரசு விதிக்குட்பட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.
விழுப்புரம் இசை பள்ளியில் சேர விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, நகராட்சி விளையாட்டு திடல், விழுப்புரம் என்ற முகவரியில் பெற்று கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 9444455750, 8220565676 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.