/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க., கவுன்சிலர் எதிர்ப்பு திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் பரபரப்பு

ADDED : நவ 01, 2024 06:30 AM
திண்டிவனம்: திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் குறைவான கவுன்சிலர்கள் பங்கேற்ற நிலையில், தீர்மானம் நிறைவேற்ற அ.தி.மு.க., கவன்சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் நகர்மன்ற கூட்டம் நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு, தலைவவர் நிர்மலா ரவிச்சந்திரன (தி.மு.க.,) தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல், கமிஷனர் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் கூட்டம் நடத்தியதால் 33 கவுன்சிலர்களில் கூட்டத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., பா.ம.க., கட்சிகளை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்நிலையில், கூட்டத்தில் 18 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அ.தி.மு.க., கவுன்சிலர் ஜனார்த்தனன், வேறு ஒரு நாளில் கூட்டத்தை நடத்தியிருக்கலாம் என்றும், மன்ற கூட்டத்தில் குறைவான கவுன்சிலர்கள் பங்கேற்றுள்ள நிலையில், ஏன் தீர்மானத்தை அவசர அவசரமாக ஏன் நிறைவேற்றுகிறீர்கள் என, கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக நகர்மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரனுக்கும், அ.தி.மு.க., கவுன்சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மன்ற கூட்டத்தில் 12 கவுன்சிலர்கள் கலந்து கொண்ட நிலையில், தீர்மானம் நிறைவேறியது குறித்து, நகராட்சி கமிஷனர் குமரனிடம் கேட்டபோது, மன்ற தீர்மான புத்தகத்தில் 17 கவுன்சிலர்கள் கையெழுத்து போட்டுள்ளதால், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இச்சம்பவத்தால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.