/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : அக் 11, 2024 06:43 AM

வானுார்: கிளியனுாரில் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
அவைத்தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் பக்தவச்சலம் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் சண்முகம் பேசுகையில், அடுத்த 2026ம் ஆண்டு நாம் ஆட்சியை பிடிக்க வேண்டும். அப்போது தான் நமக்கு மரியாதை. அதற்காக நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் மண்டல ஐ.டி., பிரிவு இணை செயலாளர் எழில்ராஜ், ஐ.டி., பிரிவு மாவட்ட செயலாளர் கோகுல்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி, இணை செயலாளர் சந்தியா, ஜெ., பேரவை செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் செல்லபெருமாள்.
ஒன்றிய துணை செயலாளர்கள் இந்திரகுமார், ஆறுமுகம், அணி செயலாளர்கள் நாராயணன், சிவரஞ்சினி, ஜெ., பேரவை வேல்முருகன், சுமன், பாலமுருகன், சீனுவாசன், அறிவழகன், சந்திரமோகன், சுபாஷ் சந்திபோஸ், ஏழுமலை, வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.