/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
/
அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : அக் 12, 2024 11:03 PM

கண்டமங்கலம் : கண்டமங்கலத்தில், வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி, அவைத் தலைவர் ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் கவுரி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஏழுமலை, கலைவாணி இணைச் செயலாளர் சவிதா, பேரவை செயலாளர் தமிழ்மணி, கிளைச் செயலாளர்கள் சங்கர், ஜனகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் சண்முகம், கட்சி வளர்ச்சிப் பணி, வரும் 2026 சட்டசபை தேர்தலின் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வைத்திலிங்கம், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் முருகன், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், ஊராட்சி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய அணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். கிளைச் செயலாளர் வேலு நன்றி கூறினார்.