ADDED : செப் 23, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த கெடாரில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
காணை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முருகன், பன்னீர், முகுந்தன், ஒன்றிய பொருளாளர் வெற்றிவேல், பேரூராட்சி செயலாளர் பூர்ணாராவ் முன்னிலை வகித்தனர். ஜெ., பேரவைச் செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினர்.
காணை ஒன்றிய முன்னாள் சேர்மன் இளங்கோவன், ஒன்றிய அவைத் தலைவர் அன்பழகன், இணைச் செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் வெற்றிவேல், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.