ADDED : செப் 30, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: வானுார் தொகுதி அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாக்கம் கூட்ரோட்டில் நடந்தது.
மாவட்ட துணைச் செயலாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வானுார் சதீஷ்குமார், கிளியனுார் பக்தவச்சலம், கோட்டக்குப்பம் நகர செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தனர். கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன் வரவேற்றனர்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் சண்முகம், 500 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கி பேசினாா். கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோண்டூர் கிளைச் செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.