ADDED : ஜன 23, 2024 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : மயிலம் தொகுதி சார்பில், திண்டிவனம் அடுத்த நெய்குப்பியில், எம்.ஜி.ஆர்.பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் விஜயன், சேகரன், விநாயகமூர்த்தி, நடராஜன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், பேச்சாளர் பார்ரீஸ் ராஜா, பாலன் ஆகியோர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தி அண்ணாதுரை, வழக்கறிஞர் சம்பத், ஒன்றிய நிர்வாகிகள் ரங்கநாதன், சீனு, பன்னீர், ராஜசேகரன், மக்புல்பாய், ஜெகதீசன், முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

