/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2024 05:18 AM

விழுப்புரம்: தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தெற்கு நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார்.
வடக்கு நகர செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். முன்னாள் மத்திய அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண்முகம் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அற்புதவேல், பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், எம்.ஜி.ஆர்., இளைஞரணி தலைவர் குமரன், செயலாளர் பிருத்திவிராஜ், ஐ.டி., பிரிவு செயலாளர் கோகுல்ராஜ்.
நகர கூட்டுறவு வங்கித் தலைவர் தங்கசேகர், மாவட்ட ஜெ., பேரவை துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, இணைச் செயலாளர் ரகுநாதன், ஜெ., பேரவை நிர்வாகிகள் ரூபன்ராஜ், வடபழனி, சக்திபெரியதம்பி, மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் ஏழுமலை, வழக்கறிஞர் வீராசம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.

