/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆர்ப்பாட்டத்திற்கு ஐகோர்ட் அனுமதி பெற்ற அ.தி.மு.க.,வினர்
/
ஆர்ப்பாட்டத்திற்கு ஐகோர்ட் அனுமதி பெற்ற அ.தி.மு.க.,வினர்
ஆர்ப்பாட்டத்திற்கு ஐகோர்ட் அனுமதி பெற்ற அ.தி.மு.க.,வினர்
ஆர்ப்பாட்டத்திற்கு ஐகோர்ட் அனுமதி பெற்ற அ.தி.மு.க.,வினர்
ADDED : செப் 19, 2024 11:12 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்த, ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
விழுப்புரம் நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை பிரச்னைகள், கோலியனுாரான் வாய்க்காலில் குப்பைகள் தேக்கம், நகரில் சேதமடைந்த சாலைகள், தெரு விளக்குகள் பழுது உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்காத மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விழுப்புரத்தில் இன்று 20ம் தேதி அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசில், அ.தி.மு.க., தெற்கு நகர செயலாளர் பசுபதி அனுமதி கோரி, கடிதம் கொடுத்தார்.
கூட்டம் அதிகளவில் வரக்கூடும் என்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீஸ் அனுமதி கோரி, சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜரானார். அ.தி.மு.க., போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய நீதிபதி, போலீசார் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.