/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க.,'சீட்'க்கு 33 ஆண்டு 'வெயிட்டிங்' : 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?
/
அ.தி.மு.க.,'சீட்'க்கு 33 ஆண்டு 'வெயிட்டிங்' : 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?
அ.தி.மு.க.,'சீட்'க்கு 33 ஆண்டு 'வெயிட்டிங்' : 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?
அ.தி.மு.க.,'சீட்'க்கு 33 ஆண்டு 'வெயிட்டிங்' : 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா?
ADDED : மார் 13, 2024 06:38 AM
விழுப்புரம் : அ.தி.மு.க.,வில் 'சீட்' பெற 33 ஆண்டுகளாக, தொடர்ந்து மாஜி எம்.எல்.ஏ., முயற்சி செய்து வருகிறார். இந்த முறை அதிர்ஷ்ட காற்று வீசும் என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் (தனி) சட்டசபை தொகுதியில், கடந்த 1977ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட தாட்கோ கண்ணன் வெற்றி பெற்றார்.
அடுத்து நடந்த 1980 தேர்தலிலும் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றார். 1984ம் ஆண்டு தேர்தலில் கட்சியில் சீட் வழங்கப்படவில்லை. தொடர்ந்து 1989ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., பிளவு பட்டபோது, இரண்டாவது இடம் பிடித்து வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இதனைத் தொடர்ந்து, 1991, 1996, 2001, 2006 ஆகிய நான்கு தேர்தல்களிலும், கட்சியில் 'சீட்' கேட்டும் கிடைக்கவில்லை.
பின்னர், 2011ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில், கண்டமங்கலம், வானுார் தொகுதியாக மாற்றப்பட்டது.
இதையடுத்து, 2016, 2021 ஆகிய தேர்தல்களிலும், வானுார் தொகுதியில் கட்சியில் 'சீட்' கிடைக்க வில்லை. இருந் தாலும் மனம் தளராமல், தொடர்ந்து விழுப்புரம் எம்.பி., தொகுதிக்கு தற்போது கட்சியில் சீட் கேட்டு காத்திருக்கிறார்.
அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் சண்முகம் ஆதரவில், பதவிக்கு வந்த பலரும் வேறு கட்சிக்கு சென்றுவிட்டனர்.
இவர் மூலம் எம்.பி., பதவிக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆனந்தன் (சசிகலா ஆதரவாளர்), முன்னாள் எம்.பி., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., செஞ்சி ஏழுமலை (ஓ.பி.எஸ்.அணி மாவட்ட செயலாளர்), முன்னாள் மாவட்ட சேர்மன் அலமேலு வேலு (ஓ.பி.எஸ்., அணி), முன்னாள் மாவட்ட கூட்டுறவு வங்கி சேர்மன் முரளி ரகுராமன் (பா.ஜ.,), முன்னாள் எம்.எல்.ஏ., கணபதி (அ.ம. மு.க.,), மாவட்ட அவைத்தலைவராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ., வளவ னுார் மணி (தி.மு.க., ஆதரவாளர்) உட்பட பலரும் கட்சியில் இருந்து வெளியேறி விட்டனர்.
இந்நிலையில், தமிழக அரசின் தாட்கோ சேர்மன் மற்றும் மத்திய அரசின் எஸ்.சி., - எஸ்.டி., ஆணைய உறுப்பினராக பதவி வகித்த தாட்கோ கண்ணன் மட்டும், அ.தி.மு.க.,வில் நிச்சயம் 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 33 ஆண்டுகளாக காத்திருக்கிறார்.
இந்த முறை அதிர்ஷ்ட காற்று அவர் பக்கம் வீசும் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

