/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிராமப்புற அரசு பஸ்களில் மாணவர்கள் சாகச பயணம்
/
கிராமப்புற அரசு பஸ்களில் மாணவர்கள் சாகச பயணம்
ADDED : செப் 23, 2024 11:58 PM

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கோலியனுார், வளவனுார் கிராம பகுதி மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் பஸ் இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
விழுப்புரத்தில் அரசு பள்ளிகளில் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவ, மாணவிகள் அதிகளவில் படிக்கின்றனர். இவர்கள், பள்ளிக்கு செல்ல அரசு பஸ்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆனால், கூடுதலாக போதிய பஸ்கள் இயக்கப்படாததால் காலை, மாலை வேளைகளில் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணத்தை தவிர்க்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பள்ளி, கல்லுாரி நேரங்களான காலை, மாலை வேளைகளில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.