/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பதிவுச்சான்றில்லாத தர்பூசணி, கிர்ணி பழம் விதைகளை வாங்கக்கூடாது என அறிவுரை
/
பதிவுச்சான்றில்லாத தர்பூசணி, கிர்ணி பழம் விதைகளை வாங்கக்கூடாது என அறிவுரை
பதிவுச்சான்றில்லாத தர்பூசணி, கிர்ணி பழம் விதைகளை வாங்கக்கூடாது என அறிவுரை
பதிவுச்சான்றில்லாத தர்பூசணி, கிர்ணி பழம் விதைகளை வாங்கக்கூடாது என அறிவுரை
ADDED : நவ 13, 2025 09:07 PM

விழுப்புரம்: அரசு பதிவுச்சான்றில்லாத தர்பூசணி, கிர்ணி பழம் விதைகளை வாங்கக் கூடாது என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன் செய்திக்குறிப்பு:
விழுப்புரம், கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நவம்பர், டிசம்பர் மாதம் முதல் விவசாயிகள் தர்பூசணி, கிர்ணி பழம் சாகுபடி செய்து வருகின்றனர். மரக்காணம், திண்டிவனம் மற்றும் வானுார் தாலுகாக்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
விதை விற்பனையாளர்கள் விதை உற்பத்தியாளர்களிடம் இருந்து உண்மைநிலை விதைக்குவியல்கள் பெறப்பட்டவுடன், குவியல் வாரியாக பணி விதை மாதிரி எடுத்து அனுப்ப வேண்டும்.
அதில், தேவையான அளவு முளைப்புத்திறன் கொண்ட விதைகளை மட்டும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விதைகளின் இருப்பு மற்றும் ரகங்களின் விவரங்களை விலைப்பட்டியல் தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும்.
விதை கொள்முதல் செய்ததற்கான கொள்முதல் பட்டியல், உண்மை நிலை விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல், விதைகளுக்கான பதிவுச்சான்று, இருப்புப்பதிவேடு மற்றும் விற்பனை பட்டியல்களை முறையாக பராமரிக்க வேண்டும். விவசாயிகள், தர்பூசணி மற்றும் கிர்ணிப்பழ விதைகளை விதை வணிக உரிமம் பெற்ற அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெறாத அல்லது பதிவுச்சான்று இல்லாத விதைகளை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தக்கூடாது. உரிமம் பெறாத முகவர்கள் மூலமோ அல்லது பிற நிறுவனங்கள் மூலமோ வெளி மாநிலங்களில் இருந்து உரிய அங்கீகாரம் பெறாத அல்லது ஆவணங்கள் இல்லாத விதைகளை விவசாயிகள் விதைப்புக்கு வாங்கி பயன்படுத்தக் கூடாது.
இதனால், ஏதேனும் களப்பிரச்னைகள் ஏற்பட்டால் விவசாயிகள் உரிய நிவாரணம் கோர இயலாத நிலை ஏற்படும். விதைச்சட்டத்தை கடைப்பிடிக்காத விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை தொடரப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

