/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிரைவர், கண்டக்டர்களுக்கான ஓய்வறை: திண்டிவனம் பணிமனையில் திறப்பு
/
டிரைவர், கண்டக்டர்களுக்கான ஓய்வறை: திண்டிவனம் பணிமனையில் திறப்பு
டிரைவர், கண்டக்டர்களுக்கான ஓய்வறை: திண்டிவனம் பணிமனையில் திறப்பு
டிரைவர், கண்டக்டர்களுக்கான ஓய்வறை: திண்டிவனம் பணிமனையில் திறப்பு
ADDED : நவ 13, 2025 09:07 PM
விழுப்புரம்: விழுப்புரம் மண்டலம், திண்டிவனம் அரசு போக்குவரத்துக் கழக கிளையில் டிரைவர், கண்டக்டர்களுக்கான 'ஏசி'யுடன் ஓய்வறை திறப்பு விழா நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் மண்டலம், திண்டிவனம் பணிமனையில், டிரைவர், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை, தொழில்நுட்ப பிரிவு பணியாளர்களுக்கான கழிவறையை, மேலாண் இயக்குநர் குணசேகரன் திறந்து வைத்துார்.
பின் தொழில்நுட்பம், தகுதிச் சான்று, கணினி, கட்டுப்பாட்டு அறை, புதுப்பித்தல் உள்ளிட்ட பிரிவுகளை ஆய்வு செய்து, பணிகள் மேம்பட ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'டிரைவர், கண்டக்டர்களுக்கு ஓய்வு என்பது மிக முக்கியமானதாகும். இவர்களின் நலனுக்காக கோட்டத்தில் உள்ள 59 கிளைகளையும் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து வழங்கியுள்ளது.
அனைத்து கிளை மேலாளர்களும், அனைத்து பணிகளையும் மேம்படுத்தி அனைத்து நிலைகளிலும் சிறப்பாக செயல்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
பொது மேலாளர்கள் ரவீந்திரன் (தொழில்நுட்பம்), ஜெகதீஸ் (விழுப்புரம் மண்டலம்), துணை மேலாளர்கள் சிவக்குமார் (வணிகம்), அறிவண்ணல் (தொழில்நுட்பம்) உட்பட உதவி மேலாளர்கள், கிளை மேலாளர் சிவக்குமார், தொழிற்சங்க பிரதிநிதிகள், பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.

