/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை! 14 டேபிள்களில் 20 முதல் 22 சுற்றுகள் எண்ண ஏற்பாடு
/
ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை! 14 டேபிள்களில் 20 முதல் 22 சுற்றுகள் எண்ண ஏற்பாடு
ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை! 14 டேபிள்களில் 20 முதல் 22 சுற்றுகள் எண்ண ஏற்பாடு
ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை! 14 டேபிள்களில் 20 முதல் 22 சுற்றுகள் எண்ண ஏற்பாடு
ADDED : மே 29, 2024 05:16 AM

விழுப்புரம் : விழுப்புரம்(தனி) லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை பணிகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமையில் நேற்று நடந்தது.
கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக்சிவாச், தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன் ஆகியோர், ஓட்டு பதிவு முன்னேற்பாடுகள் மற்றும் விதிமுறைகளை விளக்கி கூறினர். பிறகு, கவுன்ட்டிங் ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் பழனி கூறியதாவது: விழுப்புரம் (தனி) தொகுதிக்கான லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து, அதிலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விழுப்புரம் அரசு கலை கல்லூரியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அந்த கல்லூரி மையத்தில் ஓட்டு எண்ணும் பணி ஜூன் 4ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
விழுப்பரம் தொகுதி தபால் ஓட்டுகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. எண்ணிக்கையன்று காலை 6.00 மணிக்கு திறந்து, மையத்திற்கு எடுத்து செல்லப்படும்.
ஓட்டு எண்ணிக்கை, அரசு கலை கல்லூரி மையத்தில் காலை 8.00 மணிக்கு துவங்கப்படும். முதலில் 8 மணிக்கு தபால் ஓட்டு எண்ணிக்கை துவங்கப்படும்.
இதனை தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டு எண்ணிக்கை துவங்கப்படும். சர்வீஸ் வாக்காளர்களின் தபால் ஓட்டுகளும், அந்த வாக்கு சீட்டின் உண்மை தன்மையை உறுதி செய்யப்பட்டு, தபால் வாக்கு சீட்டுகளுடன் சேர்த்து எண்ணப்படும்.
திண்டிவனம், வானுார், விழுப்புரம், விக்கரவாண்டி, திருக்கோவிலுார் , உளுந்துார்பேட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கைக்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் 14 டேபிள்கள் தயார் செய்யப்படவுள்ளது. 20 முதல் 22 சுற்றுகள் எண்ணிக்கை நடக்கும்.
வேட்பாளர்கள் அவர்களின் சார்பாக முகவர்களை நியமித்து, மே 30ம் தேதிக்குள் பட்டியல் அளித்தும், அவர்களுக்குரிய அடையாள அட்டை பெற வேண்டும். தபால் வாக்கு சீட்டுகள், தேர்தல் நடத்தும் அலுவலர், முகவர்கள் முன்னிலையில் தனி அறையில் எண்ணிக்கை நடைபெறும்.
எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்கள், முகவர்கள் செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். கால்குலேட்டர் உள்ளிட்ட எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்களும் அனுமதிக்கப்படாது. எனவே செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
தொகுதி வாரியாக எண்ணிக்கை மையத்திற்கு அனுமதிக்கப்படும் முகவர்கள், அந்த இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும், எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் அமைதியை கடைப்பிடித்து, எண்ணிக்கையை நல்லமுறையில் நடத்தி முடிக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும். வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் தவிர வேறு நபர்களுக்கு மையத்திற்குள் அனுமதி இல்லை.
எண்ணிக்கை முடிந்த பின்பு, மாதிரிக்காக தலா 5 வாக்குச்சாவடிகளின் விவிபாட் சாதனங்களில் உள்ள சீட்டுகள் எண்ணிக்கை நடக்கும். இதற்காக, குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி மையம் தேர்வு செய்யப்பட்டு, அதற்குரிய -சீட்டுகள் எண்ணிக்கை நடைபெறும். தனித்தனியே சின்னம் வாரியாக பிரிக்கப்பட்டு, பின்பு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை சுற்று நிறைவு பெற்ற பின்பு அதன் முடிவு உரிய அறிவிப்பு பலகையில் எழுதப்படும். வாக்கு எண்ணிக்கை அமைதியான முறையில் நடைபெற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். தேர்தல் துறை அலுவலர்கள், கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.