ADDED : டிச 20, 2024 04:58 AM
வானுார்: காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மாணவர்களின் சார்பில், வேளாண் சார்ந்த செயல்திட்ட நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரியின் இறுதியாண்டு மாணவர்கள் ரங்கநாதபுரம், கிளியனுார் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வானுார் பகுதியில் உள்ள விவசாய மக்களுக்கு, வேளாண் சார்ந்த பல்வேறு புதிய தொழில் நுட்பங்களான ஜீரோ ஆற்றல் குளிர் அறை, பொட்டாசியம் வெளியிடும் பாக்டீரியாவின் மகத்துவம், மீன் அமிலம், மண்புழு உரம், பசுந்தால் பயிர் செய்யும் முறை, கிசான் கிரெடிட் அட்டை, மண் வளம் மற்றும் நீர்வளம் ஆகியவற்றின் மகத்துவத்தை விவசாயிகளுக்கு செயல்திட்ட செய்து எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் புஷ்பராஜ், பேராசிரியர் பார்த்தசாரதி மேற்பார்வையில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.