/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் தர்ணா
/
வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் தர்ணா
ADDED : அக் 08, 2025 12:23 AM

திண்டிவனம்; திண்டிவனத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட, 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி, விழுப்புரம் மாவட்டம் சார்பில், நேற்று காலை, திண்டிவனம் கிடங்கல் பகுதியிலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மாவட்ட செயலாளர் அனந்தசயனன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் உள்ள, 152 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் 622 பேர்; நியாய விலைக்கடை பணியாளர்கள், 1160 பேர்; என மொத்தம் 1,782 பேர் காலவரையற்ற போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் நகை கடன் வழங்கல், உரம் வழங்கல், ரேஷன் கடை பொருட்கள் வினியோகம் முற்றிலும் தடை பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.