/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 08, 2025 12:22 AM

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுாரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்.ஐ., அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கலின்கான் தலைமை தாங்கினார்.
ஒன்றிய தலைவர் குப்புசாமி, ஒன்றிய பொருளாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.
மாவட்ட துணை செயலாளர் முருகன், நிர்வாக குழு ராமச்சந்திரன்,இ.கம்யூ ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட குழு மணிகண்டன், சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில், 100 நாட்கள் வேலை கொடுக்க முடியாத நாட்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிறைவாக, நாராயணன் நன்றி கூறினார்.