/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிலுவை மின் இணைப்புகளை வழங்க விவசாய பாதுகாப்பு சங்கம் மனு
/
நிலுவை மின் இணைப்புகளை வழங்க விவசாய பாதுகாப்பு சங்கம் மனு
நிலுவை மின் இணைப்புகளை வழங்க விவசாய பாதுகாப்பு சங்கம் மனு
நிலுவை மின் இணைப்புகளை வழங்க விவசாய பாதுகாப்பு சங்கம் மனு
ADDED : அக் 02, 2024 11:40 PM

விழுப்புரம் : விழுப்புரம் மின்துறை தலைமை அலுவலகத்தில், நிலுவை விவசாய மின் இணைப்புகளை வழங்க வலியுறுத்தி விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர்.
தமிழகத்தில் தட்கல் திட்டத்திலும் மற்றும் அனைத்து விவசாய மின் இணைப்பு திட்டங்களிலும், கடந்த 2 ஆண்டுகளாக நிலுவை வைத்துள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, வேளாண் முன்னுரிமை மின் இணைப்புகளை உடனடியாக வழங்க வேண்டி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், அனைத்து மாவட்டங்களின் மின்துறை அலுவலகம் முன்பு நேற்று மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.
இந்த வகையில், விழுப்புரம் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் சக்திவேல், ஒருங்கிணைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் தலைமையில் திரண்டு வந்த விவசாயிகள், மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் தடுத்து நிறுத்தி, மனு அளிக்கும்படி கூறி அனுப்பினர். இதனையடுத்து, அவர்கள், விழுப்புரம் மின்துறை தலைமை பொறியாளரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவிவசாயிகளிடமிருந்து, ரூ.900 கோடியை தட்கல் திட்டத்தில் வசூலித்துக்கொண்ட மின் வாரியம், விவசாய மின் இணைப்பு கொடுப்பதற்கு, மின் கம்பம், கம்பி, மீட்டர்கள் இல்லை என காலம் தாழ்த்தி வருகிறது. ஆனால், வீடுகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் மின் இணைப்பு வழங்குகின்றனர். விவசாயிகள், மின் பாதையை மாற்றியமைக்க கட்டணம் செலுத்தினால், உடனடியாக செய்கின்றனர். ஆனால், தட்கல் திட்டத்தில் பணம் செலுத்தி காத்துள்ள விவசாயிகளுக்கு, உபகரணம் இல்லை எனக்கூறி காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல என குறிப்பிட்டிருந்தனர்.