/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாலியல் பலாத்கார முயற்சி வழக்கில் சாட்சி கூறிய அ.தி.மு.க., நிர்வாகியை வெட்டி கொல்ல முயற்சி வானுார் அருகே பரபரப்பு

ADDED : டிச 29, 2024 07:25 AM
வானுார்: வானுார் அருகே, பாலியல் பலாத்கார முயற்சி வழக்கில் சாட்சியம் அளித்ததால், ஆத்திரமடைந்த நபர், அ.தி.மு.க., கிளை செயலாளரை வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த கரசானுார் தருமகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 50; அ.தி.மு.க., கிளை செயலாளர். அதே பகுதி மயிலம் ரோட்டில் வசிப்பவர் பிரபாகரன், 38; இருவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.
இதில் பிரபாகர் மீது, பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு விழுப்புரம் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பிரபாகருக்கு எதிராக ராமச்சந்திரன் விழுப்புரம் கோர்ட்டில் சாட்சியம் அளித்துள்ளார்.
அதில் இருந்து ராமச்சந்திரன் மீது, பிரபாகரன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை 4;30 மணிக்கு, ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று பிரபாகரன், தனியாக இருந்த ராமச்சந்திரனிடம் 'எனக்கு எதிராக எப்படி சாட்சியம் அளித்தாய்' எனக் கூறி கத்தியால் ராமச்சந்திரனின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரனை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த வானுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குப் பதிந்து, தலைமறைவான பிரபாகரனை தேடி வருகின்றனர்.