/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., மே தின பொதுக்கூட்டம்
/
அ.தி.மு.க., மே தின பொதுக்கூட்டம்
ADDED : மே 03, 2025 04:54 AM

செஞ்சி : நாட்டார்மங்கலம் கூட்ரோட்டில் அ.தி.மு.க., அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் விநாயகமூர்த்தி, நடராஜன், சேகரன், விஜயன், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
இணைச் செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, பொதுக்குழு உறுப்பினர் மனோகர், முன்னாள் துணைச் சேர்மன் பரிமாளா பன்னீர்செல்வம், பேரவைச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பேசினர். தொழிற்சங்க மண்டல செயலாளர் கணேசன் வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் சண்முகம், மாநில எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் பன்னீர் செல்வம், தலைமைக் கழக பேச்சாளர் கலீல் பாட்சா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, அர்ஜூனன், மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், பொருளாளர் வெங்கடேசன், இளைஞரணி செயலாளர் பிரித்விராஜ், வழக்கறிஞர் அணி அருண் தத்தன், வேலவன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி.
புண்ணியமூர்த்தி, பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுலோசனா மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் காந்தி நன்றி கூறினார்.