/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை; விரக்தியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,
/
அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை; விரக்தியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,
அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை; விரக்தியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,
அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை; விரக்தியில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,
ADDED : அக் 07, 2025 12:46 AM
வி ழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் அமைச்சர்களாக இருந்த போது, இருவரும் அவரவர்களுக்குட்பட்ட எல்லையில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்பது வழக்கம்.
இரண்டு அமைச்சர்களும் பங்கேற்கும் விழாக்களில், அ.தி.மு.க., சார்பில் வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் புறக்கணித்து வந்தனர்.
தற்போது பொன்முடி, மஸ்தான் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, இதுவரை விழுப்புரம் மாவட்டத்திற்கு தி.மு.க., சார்பில் ஒரு அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை.
இதில் வானுார், திண்டிவனம் தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொள்வதில்லை. இதற்கு காரணம் விழா நடைபெறும் முதல் நாளா ன்று சம்பிரதாயத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது.
பெயருக்கு அழைப்பு விடுப்பதாலும், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றால், தனக்கு அரசியல் ரீதியாக கட்சி மேலிடம் மூலம் சிக்கல் ஏற்படும் என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக ஒதுங்கியே அரசியல் செய்கின்றனர்.
குறிப்பாக கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள், தற்போதுள்ள தி.மு.க., ஆட்சியில் திறந்து வைக்கப்படும் நிகழ்ச்சிக்கு கூட தங்களுக்கு முறையாக அழைப்பு கொடுப்பதில்லை என அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அரசு விழாவில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி வருவதால், ஆளுங்கட்சியினர் திட்டங்களை துவக்கி வைத்து, பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கி கொள்கின்றனர் என கட்சியின் நிர்வாகிகள் புலம்புகின்றனர்.
இதுபற்றி அ.தி.மு.க.,வை சேர்ந்த திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ., அர்ஜூனன் கூறுகையில், 'அரசு நிகழ்ச்சி குறித்த முறையான தகவல் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து தெரிவிப்பதில்லை.
தொகுதி பிரச்னை குறித்து சட்டசபையில் நான் கோரிக்கை வைத்து அந்த திட்டம் நிறைவேறினால், அந்த திட்டத்திற்கான துவக்க விழாவிற்கு கூட எனக்கு அழைப்பு விடுப்பதில்லை.
இதுமாதிரி தொகுதி எம்.எல்.ஏ., புறக்கணிக்கப்படுவது பற்றி, கலெக்டரிடம் பல முறை புகார் தெரிவித்தும் புறக்கணித்து வருகின்றனர்.
திண்டிவனம் தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில், தி.மு.க.,வைச் சேர்ந்த செஞ்சி எம்.எல்.ஏ.,வை வைத்து நடத்தி வருகின்றனர். இது எந்த விதத்தில் நியாயம்' என்றார்.
இனி வரும் காலங்களில் அரசு விழாவில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கியத்துவம் கொடுப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.