/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு வரும் அவலம்
/
பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு வரும் அவலம்
பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு வரும் அவலம்
பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருட்கள் மீண்டும் விற்பனைக்கு வரும் அவலம்
ADDED : அக் 07, 2025 12:46 AM
வி ழுப்புரத்தில் பறிமுதல் செய்து கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுகிறது.
விழுப்புரம் நகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பாலிதீன் கவர்கள் மீண்டும் பரவலாக விற்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், இதே போன்று கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பதை தடுப்பதற்காக, நகராட்சி சார்பில் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர்.
அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பாலிதீன் கவர்கள், கேரி பேக்குகள் போன்றவை, கிரஷ் செய்து அகற்றினர். மீதமுள்ள 5 டன் அளவில், பழைய நகராட்சி அலுவலக பகுதியில் கொட்டி வைத்திருந்தனர்.
நீண்டகாலமாக அங்குள்ள, பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பொருள்களை, ஊழியர்கள் சிலர், கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்து, மீண்டும் கடைகளுக்கும், பிளாட்பார கடைகாரர்களுக்கும் விற்று வருகின்றனராம்.
இதனால், கிடங்கில் வைத்திருந்த பிளாஸ்டிக் பொருள்களில் பாதியளவு, பிளாக்கில் விற்கப்பட்டுள்ளதாக, சக நகராட்சி ஊழியர்களே புலம்புகின்றனர்.
பழைய நகராட்சி அலுவலகத்தை இடித்துவிட்டு, புனரமைப்பு பணிகள் நடக்க உள்ளதால், அங்குள்ள இதுபோன்ற பழைய பொருள்களை சிலர், முறைகேடாக எடுத்துச்செல்வதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.