/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரி கள்ளச்சாராய புழக்கம்; உஷாராகுமா விழுப்புரம் மாவட்ட போலீஸ்
/
புதுச்சேரி கள்ளச்சாராய புழக்கம்; உஷாராகுமா விழுப்புரம் மாவட்ட போலீஸ்
புதுச்சேரி கள்ளச்சாராய புழக்கம்; உஷாராகுமா விழுப்புரம் மாவட்ட போலீஸ்
புதுச்சேரி கள்ளச்சாராய புழக்கம்; உஷாராகுமா விழுப்புரம் மாவட்ட போலீஸ்
ADDED : அக் 07, 2025 12:45 AM

ம ரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 14 பேர், கடந்த 2023ம் ஆண்டு மெத்தனால் கலந்த சாராயம் குடித்து இறந்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் அடங்குவதற்குள், கடந்த 2024ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் விஷ சாராயம் குடித்த பெண்கள் உட்பட 65க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புதுச்சேரியை ஒட்டி இருக்கும் பகுதிகளில் சாராயம், மதுபாட்டில்கள் கடத்தப்படுவது, மெத்தனால் கடத்தப்படுவது உள்ளிட்ட சம்பவங்களை கண்காணிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கலால் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், புதுச்சேரியில் உள்ள சாராய வியாபாரிகள், தமிழக பகுதியில் மீண்டும் சாராய பாக்கெட்டுகளை விற்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக புதுச்சேரி அடுத்த திருக்கனுார், லிங்காரெட்டிப்பாளையம் பகுதிகளில் இருந்து மயிலம், கிளியனுார் வழியாக சீல் பதிக்காத புதுச்சேரி சாராய பாக்கெட்டுகளை கிராமங்களில் விற்பனை செய்கின்றனர்.
இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் கிளியனுார் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 3 பேர் கைது செய்யப்பட்டு 302 பாக்கெட் சீல் வைக்கப்படாத புதுச்சேரி சாராய பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
மரக்காணம், கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்தைப் போன்று மீண்டும் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே தமிழக போலீசார், புதுச்சேரி போலீசாருடன் கைகோர்த்து தமிழக பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடும் புதுச்சேரி வியாபாரிகளை கூண்டோடு கைது செய்தால் மட்டுமே, சாராய விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.