/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 19, 2025 03:01 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் தி.மு.க., அரசை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதிய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், சண்முகம் எம்.பி., தலைமை தாங்கி பேசினார். நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோர் வரவேற்றனர்.
எம்.எல்.ஏ.,க்கள் அர்ச்சுணன், சக்கரபாணி, முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் பாலசுந்தரம், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலாளர் அற்புதவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மருத்துவரணி செயலாளர் முத்தையன், வர்த்தக அணி செயலாளர் செந்தில்வேலன், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், ஜெ., பேரவை செயலாளர் ரூபன் ராஜ், இளைஞரணி செயலாளர் உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், ராமதாஸ், கண்ணன், புலியனுார் விஜயன், கிருஷ்ணமூர்த்தி, பன்னீர், வழக்கறிஞர் அணி தொகுதி செயலாளர்கள் ராதிகா செந்தில், வேலவன், குமரவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணை செயலாளர் ஜெகதீஸ்வரி சத்தியராஜ், மாவட்ட தலைவர் பிரபாகரன், மகளிரணி தமிழ்செல்வி, முன்னாள் கவுன்சிலர் கணேஷ் சக்திவேல், மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளர் தவமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் காயத்ரி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமலிங்கம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஸ்ரீதர், துணை தலைவர் சகாதேவன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன், ஜெ., பேரவை மாவட்ட துணை செயலாளர் குமார், விஜயகுமார், இளைஞரணி துணை செயலாளர் பாலசுப்ரமணியன், இலக்கிய அணி செயலாளர் சுதாகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு காமேஷ், திருப்பதி, சங்கர், வழக்கறிஞர் பிரிவு குலசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.