/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திண்டிவனத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திண்டிவனத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திண்டிவனத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திண்டிவனத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 14, 2025 11:26 PM

திண்டிவனம்: தமிழகத்தில் நடந்து வரும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கலாசாரம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து, விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டிவனம் காந்தியார் திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். நகர செயலாளர் தீனதயாளன், நகர ஜெ.பேரவை செயலாளர் வழக்கறிஞர் ரூபன்ராஜ் முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில ஜெ.,பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் பேசினர்.
முன்னாள் அமைச்சர், விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் செல்லபெருமாள், மாநில எம்.ஜி.ஆர்.,மன்ற துணைச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராமதாஸ், ரவிவர்மன், சத் தீஷ், விநாயகமூர்த்தி, நடராஜன்.
பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், நெமிலி வெற்றிவேந்தன், முன்னாள் ஊராட்சி தலைவர் அமுதாதேவி, ஜெ.பேரவை நிர்வாகிகள் குமார், விஜயகுமார், வெற்றிவேந்தன், சக்தி பெரியதம்பி, திருப்பதி பாலாஜி.
ஐ.டி.,பிரிவு மண்டல தலைவர் காமேஷ், மாவட்ட செயலாளர் கோகுல்ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், இளைஞரணி தலைவர் குமரன், வழக்கறிஞர் அணி தொகுதி செயலாளர் ராதிகா செந்தில், வழக்கறிஞர் வீர சம்பத், நகர இளைஞரணி செயலாளர் உதயகுமார், மகளிர் அணி ஜெயஸ்ரீ, கவுன்சிலர்கள் கார்த்திக், சரவணன், நிர்வாகிகள் ஜெயவேல், தினகரன், சிவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

