/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.4.15 கோடி நிதியுதவி: 5 எம்.பி.,க்கள் பரிந்துரை
/
விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.4.15 கோடி நிதியுதவி: 5 எம்.பி.,க்கள் பரிந்துரை
விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.4.15 கோடி நிதியுதவி: 5 எம்.பி.,க்கள் பரிந்துரை
விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.4.15 கோடி நிதியுதவி: 5 எம்.பி.,க்கள் பரிந்துரை
ADDED : நவ 14, 2025 11:26 PM
-நமது நிருபர்-
விழுப்புரம் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக 5 மாநிலங்களைவை எம்.பி.,க்கள் 4.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், 2025-26ம் ஆண்டிற்கு, விழுப்புரம் தொகுதி எம்.பி., ரவிக்குமார் பரிந்துரைப்படி, 4 கோடியே 77 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான 54 பணிகள் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆரணி தொகுதி எம்.பி., தரணிதரன் பரிந்துரைப்படி, 1 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான 19 பணிகள் பரிந்துரை செய்யப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்படி, முன்னாள் அமைச்சர் சண்முகம் எம்.பி., பரிந்துரைப்படி, 3 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 107 பணிகள் பரிந்துரை செய்யப்பட்டது.
முன்னாள் மத்திய அ மைச்சர் அன்புமணி எம்.பி., பரிந்துரைப்படி, 56 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 6 பணிகள் பரிந்துரை செய்யப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் வாசன் எம்.பி., பரிந்துரைப்படி, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு பணியும், கனிமொழி எம்.பி., பரிந்துரைப்படி, 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு பணியும், கிரிராஜன் எம்.பி.,பரிந்துரை படி, 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 பணிகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக முன்னாள் அமைச்சர்கள் வாசன், அன்புமணி, சண்முகம் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, கிரிராஜன் ஆகியோர் 4.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

